தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படத்தினை தில்ராஜ் தயாரிக்க தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் இவரை எடுத்து குஷ்பூ, சம்யுத்தம் ஏராளமான முக்கிய பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இதில் விஜய் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவரை அடுத்து நடிகை ராசுமிக்கா மந்தனாவும் கலந்து கொண்ட நிலையில் இவர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு படக்குழுவினர்களிடம் கண்டிஷன் போட்டிருந்ததாகவும் அதன் பிறகு அவர் சொன்ன கண்டிஷன் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் பாலிவுட்டிலும் நடித்துவரும் நிலையில் இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை அடுத்து இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பொழுது தன்னுடைய காருக்கு முன்னும் பின்னும் இரண்டு பைலட் கார்கள் வரவேண்டும் எனவும் ராஷ்மிகா மந்தனா இறங்கியவுடன் அந்த காரில் வரும் பௌன்சர்கள் ரஷ்மிகா மந்தனாவை சுற்றி நின்று கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்பிற்கு செல்லும் பொழுதும் இவ்வாறு பைலட் கார்கள் வரவேண்டும் என கண்டிஷன் போட்டுள்ள நிலையில் அதனை படக்குழுவினர்களும் நிறைவேற்றியுள்ளார்கள் என தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது