வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா.! அந்த வீடியோவை பாக்க ரெண்டு கண்ணு பத்தாது.

vijay-
vijay-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா இவர் கன்னட பெண் ஆனாலும் தெலுங்கு சினிமா தான் இவருக்கு அதிக பட வாய்ப்புகளை கொடுத்தது இவரும் சிறப்பான கதைகளை தேர்வு செய்து வெற்றி படங்களை கொடுத்து பிரபலம் அடைந்தார்.  ஒரு கட்டத்தில் பிற மொழிகளிலும் வாய்ப்பு கிடைதத்து.

அந்த வகையில் தெலுங்கு சினிமாவையும் தாண்டி தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பட வாய்ப்பை கைப்பற்றி அசத்தி வருகிறார். அந்த வகையில் ராஷ்மிகா வந்தனா  கையில் மஜ்னு, புஷ்பா 2, வாரிசு ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் தற்பொழுது ராஷ்மிகா வந்தனா வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

அதுவும் விஜய் உடன் முதல் முறையாக நடிக்கிறார் என்பதால் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. வாரிசு திரைப்படத்தில் விஜய்,  ராஷ்மிகா மந்தனாவை  தவிர ஜெயசுதா, குஷ்பூ, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகியிருந்தாலும் அதே சமயம் காதல், காமெடி போன்ற காட்சிகளும் அதிகம் இடம் பெற்றுள்ளதாக தெரிகின்றன. இப்படி சினிமா உலகில் பிஸியாக இருந்தாலும் மற்ற நேரங்களில் விளம்பர படங்களில் நடிப்பது ரசிகர்களை சந்திப்பது போன்றவற்றை செய்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது விஜயின் வாத்தி கம்மிங் பாடல் போடப்பட்டது. அந்த பாடலுக்கு  நடிகை ராஷ்மிகா மந்தனா செம குத்தாட்டம் போட்டு  போட்டுள்ளார் அந்த வீடியோ இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.