ராஷ்மிகா மந்தனாவையே ஓரம்கட்டிய ஷங்கரின் மகள்.! வைரலாகும் வீடியோ

aditi-shankar
aditi-shankar

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் விருமன். இந்த திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அது மட்டும் இல்லாமல் முதல் திரைப்படம் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து திரைப்படங்களின் நடிக்கும் வாய்ப்பை மிக எளிதாக அடைந்தார்.

விருமன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்தது அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளத்தில் கணக்கை தொடங்கினார் அதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இதனால் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திலும் அதிதி சங்கர் கதாபாத்திரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்தின் படபிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளை இவரும் ஒருவர்.

பல நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சமூக வலைதளத்தை பயன்படுத்தி போட்டோ சூட் நடந்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பட வாய்ப்பு தேடி வருவார்கள் அந்த வகையில் தற்பொழுது சமீப காலமாக சீரியல் நடிகை முதல் சினிமா நடிகை வரை இந்த யுக்தியை கடைப்பிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அதிதி சங்கர் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகிறார் அந்த புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக் பெற்று வருகிறது. அந்த வீடியோவில் அதிதி சங்கர் அவர்களுடன் இணைந்து இந்திராஜா சங்கர் அவரும் நடனமாடியுள்ளார் அந்த வீடியோ தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வெளியாகிய புஷ்பா என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல பிரபலம் அந்த வகையில் புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சாமி சாமி பாடலுக்கு தான் அதிதி சங்கர் மற்றும் இந்திராஜ் சங்கர் இருவரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்