தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட பெண்ணாக இருந்தாலும் தெலுங்கு சினிமா தான் இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தது அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தொடர் ஹிட் படங்களை கொடுத்து அதனால் அங்கு தற்போது உச்ச நட்சத்திரமாக நடிக்க இருக்கிறார்.
இப்பொழுது கூட அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு போன்ற படங்களில் நடித்து தனது பெயரையும், புகழையும் அதிகமாகவே சம்பாதித்துக் கொண்டார். தெலுங்கை தாண்டி தமிழிலும் இவர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் இப்படித்தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை வெற்றி பெற தவறிய காரணத்தினால் நல்ல கதைக்காககாத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா என்ற திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியானது படம் தற்போது உலக அளவில் சூப்பர் ஹிட் அடித்து முதல் வாரத்தில் மட்டுமே 229 கோடியை கைப்பற்றி அசத்தியது இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார் மேலும் தனது கதாபாத்திரமாக ஒன்றி நடித்து அசத்தினார்.
ராஷ்மிகா மந்தனா அடுத்த படத்தில் இணையாமல் தற்போது ஊர் சுற்றி வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவர்கொண்டா உடன் கை கோர்த்தது கீதகோவிந்தம் டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றன அப்போதே இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக சில தகவல்கள் கசிந்தன ஆனால் இது போன்ற விஷயங்கள் சினிமா உலகில் மிக சாதாரணமாக பார்க்கப்பட்டது.
இப்போது ஒரு பெரிய வெடிகுண்டை வெடித்துள்ளது என்று தான் கூற வேண்டும் ஆம் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவர்கொண்டா காதல் உறவில் இருப்பதாக செய்திகள் வருகின்றன இருவரும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சுற்றுலாவுக்காக பாரிஸ் சென்றுள்ளனர் அதுமட்டுமின்றி ஹைதராபாத்திலும் ஒன்றாக ஊர் சுற்றி தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர் செய்திகள் தீயை பரவி வந்தன.
இந்த நிலையில் ஹைதராபாத் ஹோட்டலில் இருவரும் ஒன்றாக தங்கியுள்ளனர் அந்த ஹோட்டலை விட்டு வெளியே வரும்பொழுது பத்திரிகையாளரிடம் வசமாக மாட்டிக் கொண்டனர் இதிலிருந்து இவர்கள் இருவரும் காதல் உறவில் இருப்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.