rashi khanna : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராசி கண்ணா இவர் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டவர், தமிழில் முதன் முதலாக 2013ம் ஆண்டு மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், தமிழில் முதன்முதலாக இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தில் அதர்வாவின் காதலியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் என பல திரைப்படங்களில் நடித்தார்.
என்னதான் இவர் பல திரைப் படங்களில் நடித்தாலும் முன்னனி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் தமிழ் சினிமாவில் தடுமாறி வருகிறார், தமிழ் நடிகை ஹன்சிகா எப்படியோ அதேபோல் தெலுங்கில் ராசி கண்ணா, ராசி கண்ணா முதன்முதலில் கொழுக் முழுக் என குண்டாகத் தான் இருந்தார். அதன்பிறகு தனது உடல் எடையை குறைத்து ஹன்சிகா போல் ஒள்ளியாக மாறி உள்ளார்.
என்னதான் ரசிகர்களுக்கு குண்டான தேகம் பிடித்தாலும் பலருக்கு பிடிக்காமல் போய்விட்டது. அதனால் உடல் எடையை குறைத்து சமூக வளைதளத்தில் சில புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி உடல் எடையை குறைத்து விட்டீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் மேலாடை இல்லாமல் இப்படியா போட்டோ ஷூட் நடத்துவது என விமர்சனம் செய்து வருகிறார்கள்.