ரஞ்சித்தின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஹீரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ranjith1
ranjith1

தற்போது உள்ள பிரபல இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பா ரஞ்சித். இவர் தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தயாரிப்பாளராக மாறி உள்ளார் அந்த திரைப்படத்தை பற்றி சில தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கபாலி மற்றும் காலா இந்த இரண்டு திரைப்படங்களும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு திரைப்படங்களையும் பா ரஞ்சித் தான் இயக்கினார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் ஆர்யா நடித்து வரும் சல்பேட்டா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.

இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி நடை போட்டு வருகிறார். அந்தவகையில் பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த இரண்டு திரைப்படங்களையும் பா ரஞ்சித் தான் தயாரித்திருந்தார்.

samuthirakani
samuthirakani

நிலையில் பா ரஞ்சித்த்திற்கு உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த தனுஷ் மாரி என்பவர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை பா ரஞ்சித் தயாரிக்கிறாம். இதனைத் தொடர்ந்து மேலும் புதிதாக வேறு ஒரு  படத்தில் ரஞ்சித் கமிட்டாகி உள்ளாராம்.

pa ranjith
pa ranjith

இந்நிலையில் ரஞ்சித்தின் நீலம்  புரோடக்சன்ஸ் ரைட்டர் என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று ரஞ்சித் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதோடு சமுத்திரகனி இத்திரைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.