“ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடல் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை..! சந்தோஷத்தில் இருக்கும் தளபதி விஜய்..

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய் இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக இருந்தாலும் இந்த படத்தில் ஆக்சன், காமெடி போன்றவையும் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதனால் இந்த படத்தை பெரிய அளவில் மக்கள் மன்றம் ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.

இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக ரசிகர்களை சந்தோஷப்படுத்த அடுத்தடுத்த அப்டேட் கொடுக்க இருகிறது. வாரிசு படத்தில் இருந்து இதுவரை ப்ரஸ்ட் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நிலையில் தற்பொழுது முதல் பாடலையும் ரிலீஸ் செய்துள்ளது.

தமன் இசை அமைக்க விஜய் பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் நேற்றைய கோலாகலமாக ரிலீஸ் ஆனது பாடல் சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் 24 மணி நேரத்தில் ஒரு சூப்பரான சம்பவத்தை செய்திருக்கிறது.

விஜயின் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து முதலிடத்தை பிடித்து இருக்கிறது மேலும் இந்த பாடல் 1.17 மில்லியன் லைக்குகளை பெற்று அசத்தி இருக்கிறது. தொடர்ந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் நல்ல வரவேற்பை பெற்று போய்க்கொண்டிருக்கிறது.