rajini and ranjith issue : தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் அதேபோல் இவரின் திரைப்படத்தை காண ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் திரையரங்கில் அலைமோதும் அந்த அளவு ரஜினியின் திரைப்படத்திற்கு இன்றுவரை மாஸ் குறைந்ததே கிடையாது.
இருந்தாலும் முதன்முதலாக ரஜினியின் திரைப்படத்தை வெறுக்கும் படி திரைப்படத்தை இயக்கியவர் தான் பா ரஞ்சித், இவர் என்னதான் கபாலி காலா ஆகிய திரைப்படங்களை எடுத்துக் கொடுத்தாலும் சில தரப்பு ரசிகர்கள் ஏற்கும்படி தான் இந்த திரைப்படம் அமைந்தது. ஆனாலும் இந்த திரைப்படம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உணர்த்திய திரைப்படமாக இருந்தது.
இந்த நிலையில் கபாலி வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்தார்கள், பல திரை பிரபலங்களும் இந்த திரைப்படத்தைப் பற்றி நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் கருத்து தெரிவித்தார்கள் ஆனால் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் அவர்கள் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் இந்து மதத்தை பற்றி பேசியிருப்பார் அதுமட்டுமில்லாமல் கருப்பர் கூட்டம் ஒழிய வேண்டுமென ஆவேசத்துடன் ஒரு பதிவை வெளியிட்டார், அதேபோல் பா ரஞ்சித் அவர்கள் தன்னுடைய கொள்கையை அவர் எடுக்கும் படங்களில் மூலமாகவே மக்களிடம் எடுத்து செல்கிறார் இதனால் பெரும் சர்ச்சை இருந்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் பா ரஞ்சித் சமீபத்தில்கூட ராஜராஜ சோழன் பற்றி ஒரு கருத்தை தெரிவித்து ஒட்டுமொத்த மக்களிடம் சிக்கி தவித்தார் என்பது அனைவருக்கும் தெரியும், இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எப்படியோ இருந்த ரஞ்சித்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த பட வாய்ப்பு தான் இன்று அவரின் வளர்ச்சிக்கு காரணம் ஆனால் ரஜினிகாந்தின் படத்தை வாழ்த்த கூட முடியவில்லை ரஞ்சித்துக்கு காரணம் அவரின் கொள்கை.
இந்த நிலையில் பலமுறை ஜாதியை ஒழிப்போம் ஜாதியை ஒழிப்போம் என வாய் கிழிய பேசியது எல்லாம் பொய் தானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரஞ்சித்தை பார்த்து.