பா ரஞ்சித் மற்றும் விக்ரம் திரைப்படத்தின் தலைப்பு இதுதானா.! இதுவும் அதுபோல் கதையா.? அப்போ படம் சொல்லவே வேண்டாம்

pa-ranjith-vikram
pa-ranjith-vikram

பா ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்கள் சர்ச்சைகளை சந்தித்தாலும் விமர்சன ரீதியாக ஓரளவு வெற்றி பெற்று வருகிறது. அதேபோல் விக்ரம் மஹான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கோப்ரா பொன்னியின் செல்வன் துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

இந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது விக்ரம் தனது 61வது திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் பாடிபில்டிங் விளையாட்டு வீரர் சம்பந்தப்பட்ட கதை அம்சத்தை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு மைதானம் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17ஆம் தேதி இந்த திரைப்படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அதுமட்டுமில்லாமல் போஸ்டரும் வெளியிடப்படும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் குத்து சண்டையை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருந்தது இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் இந்த திரைப்படத்திலும் பாடிபில்டிங் கதையம்சம் கொண்ட படமாக இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்படும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.