நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைபடத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடி உள்ள இந்த பாடல் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹெச் வினோத் இயக்கி உள்ள துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதே தினத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. பல வருடங்கள் கழித்து அஜித், விஜய் ஒரே தினத்தில் மோத உள்ளதால் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் காத்திருக்கிறார்கள். வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்திலிருந்து போஸ்டர் மட்டும் வெளியாகி வந்த நிலையில் நேற்று சில்லா சில்லா என தொடங்கும் இந்த பாடல் வெளியாகி இணையதளத்தில் செம்ம வைரலாகி வருகிறது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள இந்த சில்லா சில்லா பாடல் வாரிசு திரைப்படத்தில் அமைந்துள்ள ரஞ்சிதமே பாடலை ஓவர் டேக் செய்துள்ளதாக சில கருத்துக்கணிபுகள் வெளியாகியுள்ளது.
அதாவது விஜயின் வாரிசு திரைப்படத்தில் அமைந்துள்ள ரஞ்சதமே பாடல் வெளியாகி 6 நிமிடத்தில் 100k பார்வையாளர்களை கடந்துள்ளது. அதேபோல துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள சில்லா சில்லா பாடல் ஐந்து நிமிடத்தில் ரஞ்சிதமே செய்தார்100k பார்வையாளர்களை கடந்துள்ளது.
மேலும் அதேபோல ரஞ்சிதமே பாடல் 14 நிமிடத்தில் 200k பார்வையாளர்களையும், 27 நிமிடத்தில் 300k பார்வையாளர்களையும், 41 நிமிடத்தில் 400k பார்வையாளர்களையும், 59 நிமிடத்தில் 500k பார்வையாளர்களையும், கடந்துள்ளது ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல்.
இதேபோல துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள சில்லா சில்லா பாடல் பத்து நிமிடத்தில் 200k பார்வையாளர்களையும், 17 நிமிடத்தில் 300k பார்வையாளர்களையும், 28 நிமிடத்தில் 400k பார்வையாளர்களையும், 47 நிமிடத்தில் 500k பார்வையாளர்களையும், கடந்து உள்ளது. வாரிசு திரைப்படத்தை விட துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள சில்லா சில்லா பாடல் குறுகிய நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதோ முழு விவரம்…