சில்க் ஸ்மிதா தற்கொலை செய்ததற்கு இவர் தான் காரணமா? சிலுக்கை பயன்படுத்திக் கொண்ட நடிகர்களின் பெரிய லிஸ்டே இருக்கு.. பிரபலம் பேட்டி

silk-sumitha
silk-sumitha

கவர்ச்சி புயல் சில்க் ஸ்மிதாவை பல நடிகர்கள் பயன்படுத்திக் கொண்ட நிலையில் அந்த லிஸ்ட் மிகவும் பெருசு என பயில்வான் ரங்கநாதன் சமீப பேட்டியில் கூறி இருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து கவர்ச்சியால் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் சிலுக்கு ஸ்மிதா. சினிமாவில் புகழின் உச்சியில் இருந்து வந்த இவருடைய வாழ்க்கையில் பல மர்மங்கள் நடந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இவ்வாறு இவருடைய மரணம் தற்பொழுது வரையிலும் மர்மமாக இருந்து வரும் நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சிலுக்கு சுமிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கு அவரது கணவர் தான் காரணம் டாக்டரான அவர் அளவுக்கு அதிகமான போதை ஊசிகளை போட்டு அவரை போதைக்கு அடிமையாக்கி விட்டார்.

சிலுக்கு சுமிதா சினிமாவுக்குள் வர நானும் ஒரு முக்கிய காரணம் தான் மாயா என்கின்ற பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்தபோது சிலுக்கு ஸ்மிதாவின் கவர்ச்சி புகைப்படத்தை அதில் போடுவேன். அப்படி ஒரு நாள் விணு சக்கரவர்த்தியை நான் பேட்டி எடுத்திருந்த நிலையில் சிலுக்கு சுமிதாவின் கவர்ச்சி படத்தை பார்த்து யார் அந்த பொண்ணு எனக் கேட்டார். அதன் பிறகு நான் அவருக்கு சிலுக்கு சுமிதாவின் வீட்டு அட்ரஸை கொடுத்தேன்.

அதன்பின் தான் அவரை தனது வண்டிச்சக்கரம் என்கின்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார் விணு சக்கரவர்த்தி. இதனால் சிலுக்கு சுமிதா என் மீது நன்கு மரியாதை வைத்திருந்தார் எனக்கும் படங்களில் நடிக்க சான்ஸ் வாங்கி கொடுத்ததோடு எனக்கு ஜோடியாகவும் நடித்தார். சில்க் ஸ்மிதா இயல்பாகவே ஒரு வெலந்தியானவர் அவர் சம்பாதித்ததை அவரது சித்தியும், அத்தையும் அவரிடம் இருந்து அபகரித்து விட்டார்கள்.

சில முறை சில்க் ஸ்மிதாவின் கண்ணே கதை சொல்லும் அந்த அளவிற்கு ஈர்ப்பு கொண்டவர். கவர்ச்சி நடிகையாக அறிமுகமானதால் ஆரம்பத்தில் கவர்ச்சி வேடங்களில் அதிக அளவில் நடித்தார். ஆனால் அவர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க கூடிய திறமை வாய்ந்தவர் நாயகிகள் 40 படங்கள் நடித்து சம்பாதிக்க வேண்டியதை சிலுக்கு சுமிதா நான்கு பாடல்களில் கவர்ச்சி நடனமாடி சம்பாதித்து விட்டார். மேலும் சினிமாவில் சிலுக்கு சுமிதாவை பயன்படுத்திக் கொண்ட நடிகர்களின் பெரிய லிஸ்ட் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.