அஜித் கண்டிஷன் போட்டாரு.. விஜய் ஆண்டனி ஏன் சொல்லல.. பணத்துக்காக கேவலமாக பேசும் பயில்வான் ரங்கநாதன்

Vijay Antony
Vijay Antony

Bayilvan Ranganathan : நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் முன்னணி நடிகர், நடிகைகள் தொடங்கி  சின்ன நடிகர், நடிகைகள் வரை எல்லோரைப் பற்றியும் பேசுவார். அதுவும் அவர்களுடைய பர்சனல் விஷயம் தொடங்கி சினிமாவில் நடக்கும்..

அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக போட்டு உடைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்  இதனாலையே அவருடைய ஒவ்வொரு பேச்சும் பூதாகரமாக  வெடிப்பது வழக்கம்.. அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆண்டனி பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறி உள்ளது..

தனது மகள் மீராவை பறி கொடுத்ததால் சோகத்தில் விஜய் ஆண்டனி இருக்கிறார் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.. அவரைப் பற்றி பயில்வான் ரங்கநாதன் சொன்னது.. சைத்தான், எமன், கொலை, இரத்தம் என நெகட்டிவ்வான தலைப்புகளில் அவர் நடிக்கிறார் எனவே தான் அவருடைய வாழ்வில் சோகங்கள் நடப்பதாக கூறினார்.

மேலும் பேசிய அவர் சினிமா பிரபலங்களின் மரணத்திற்கு கேமராக்கள் படம் பிடிக்க கூடாது என தயாரிப்பு சங்கம் தடை விதித்து இருக்கிறது. அஜித்தின் தந்தை சமீபத்தில் உயிரிழந்தார் கேமராமன்கள் வர வேண்டாம் என அஜித் சார் கோரிக்கை விடுத்தார். அதே போல் கேமரா மேன்கள் உள்ளே  வர போகவில்லை ஆனால் நடிகர் விஜய் ஆண்டனி அப்படி சொல்லவில்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ரங்கநாதன் இதை மேடையில் பேசினார் அப்பொழுதே கூடியிருந்த சினிமா பிரபலங்களே பயில்வான் ரங்கநாதன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார்.