சமிப காலமாக பல ஹீரோக்கள் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல்வேறு முக்கியத்துவம் உள்ள ரோல்களைத் தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகின்றனர் ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டியவர் நடிகர் பசுபதி.
சினிமாவில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் காமெடி என அனைத்திலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நல்ல தீனி போட்டவர் என்பது குறிப்பிடதக்கது.
இவர் சமீபத்தில் பா ரஞ்சித் உடன் கூட்டணி அமைத்து “சார்பட்டா பரம்பரை” என்னும் திரைப்படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்து பின்னி பெடல் எடுத்தார் ஆர்யாவின் நடிப்பு இந்த படத்தில் எப்படி இருந்ததோ அது போல இவரின் கதாபாத்திரமும் பாராட்டும் வகையில் இருந்தது அந்த அளவிற்கு நேர்த்தியாக நடித்திருந்தார்.
இந்த படம் குறித்து பேசிய நடிகர் பசுபதி நான் எடுத்துக்கொண்ட கதையை சொல் நேர்த்தி செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் பா ரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல.. என் திரைவாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்த்துக் கொள்கிறது.
மேலும் என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எந்த சமரசமும் இன்றி இந்த படத்தை தயாரித்த நீலம் புரோமோஷன் & k9 ஸ்டுடியோஸ் என் நன்றிகள் என்றார்.