பிரபல விஜய் டிவியின் மூலம் பல திறமையான தொகுப்பாளர்கள் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் vj ரம்யா. இவரின் பேச்சுத்திறமையினாலும்,நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அழகினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
பிறகு தொடர்ந்து சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா வெள்ளித்திரையில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இத்திரைப்படத்திற்கு முன்பு ஆடை, கேம் ஓவர், வனமகன், மாஸ் என்ற மாசிலாமணி, ஓ காதல் கண்மணி உட்பட இன்னும் ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு 2007ஆம் ஆண்டு வெளிவந்த மொழி திரைப்படத்தின் மூலம் தான் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது சங்கத்தலை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு இவர் திரையுலகில் பிசியாக இருந்து வந்தாலும் எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது முன்னனி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு கருப்பு நிற மெல்லிய புடவையின் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.