தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகையர் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் சொல்லும் அளவிற்கு பிரபலம் கிடைக்காத காரணத்தினால் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதை தொடர்ந்தார்.
இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பங்குபெற்றார் இந்த ஷோ இவருக்கு பெரிய ரீச்சினை பெற்று தந்தது. இதனால் சில ஷோக்கலில் நடுவராக பணியாற்றி வந்த ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்று பிரபலமானவர்.
இவ்வாறு இதன் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்ற நிலையில் தொடர்ந்த அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதோடு மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் தனது கிளாமர் புகைப்படங்கள் மூலம் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய ரம்யா பாண்டியன் பேட்டி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் அதில், நான் கண்டிப்பாக காதல் கல்யாணம் தான் செய்து கொள்வேன் தற்பொழுது என் வாழ்க்கையில் யாரும் இல்லை ஆகவே இப்பொழுது நான் சிங்கிள் தான் ஒருவரை எனக்கு பிடிக்க வேண்டும் என்றால் அவரது பர்சனாலிட்டி வைத்து தான் பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.
சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது உள்ள ஏராளமான இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். மேலும் தற்பொழுது இவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.