நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் இவர் வலிமை படத்தை தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் பேங்க் ராபரியை மையமாக வைத்து படம் உருவாகப்படுகிறது அதனால் இந்த படத்தில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என சொல்லப்படுகிறது.
இந்த படத்திற்காக அஜித் ரொம்பவும் மெனக்கெட்டு நடித்துள்ளார். அதுவும் இந்த படத்தில் அஜித் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தின் சூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளது. இறுதிக்கட்ட சூட்டிங் வெளிநாடுகளில் தொடங்கப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் தற்பொழுது படபிடிப்பு நடத்தாமல் இருக்கிறது.
இந்த நிலையில் அஜீத் மற்றும் மஞ்சு வாரியார் போன்றவர்கள் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளனர் தொடர்ந்து அந்த புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்தை பிரபல நடிகை ஒருவர் பின்பற்றி வருகிறார் அஜித் படங்களில் தொடர்ந்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அஜித் கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் தனது திறமையை வெளிக்காட்டுவது வழக்கம் அந்த வகையில் கார், பைக் ரேஸ், சமைப்பது, துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் அதே போல நடிகை ரம்யா பாண்டியனும் படப்பிடிப்பு இல்லை என்றால் அவரும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து உள்ளார்
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பரவா இல்லையே உங்களுடைய எண்ணமும் மாறி இருக்கிறது அஜித்தின் வழியை பின்பற்றுவது சூப்பர் என கூறி அவருக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் நடிகை ரம்யா பாண்டியனின் புகைப்படத்தை..