பூஜையுடன் தொடங்கியது ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம்!! வைரலாகும் வீடியோ..

தனது கவர்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் டம்மி பட்டாசு, ஜோக்கர்,ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் சொல்லுமளவிற்கு எந்த ஒரு படமும் பிரபலத்தை தரவில்லை.

பிறகு ரம்யா பாண்டியன் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தொடர்ந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் எளிதில் கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சி இறுதிவரை சென்றார். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த உடன் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ramyanewmovie
ramyanewmovie

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் ரம்யா பாண்டியன் கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் கிரிஸ் இசையமைக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடிகை வாணிபோஜனும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படத்தின் பூஜை சென்னையில் சிம்பிளாக நடைபெற்றுள்ளது. பூஜையில் நடிகை ரம்யா பாண்டியனும் கலந்துள்ளார். அவ்வ போது  எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.