தொலைக்காட்சிகளில் நடித்து வந்தவர் தான் ரம்யா பாண்டியன் இவர் 2015ஆம் ஆண்டு ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து ஆண் தேவதை என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நான்காவது சீசனிலும் போட்டியாளராக கலந்து கொண்டார் இவர் வேறு யாரும் கிடையாது சினிமாவில் கொடிகட்டிப் பறந்த அருண்பாண்டியனின் மகள்தான். அதாவது அருண்பாண்டியன் தான் இவருக்கு சித்தப்பா. திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட இவர் தோட்டக்கலையில் அதிக ஆர்வம் கொண்டார்.
இவர் முதன்முதலில் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து ஒரு திரைப்படத்திலும் சீவி குமாரின் திருக்குமரன் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தில் தயாரித்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பொதுவாக அந்த காலத்தில் அம்மன் வேடம் என்றாலே கே ஆர் விஜயா தான் பிரபலம். அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேடத்தில் கனகச்சிதமாக நடித்திருந்தார் ஒரு சில நடிகைகள் அம்மன் வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்து உள்ளார்கள். அந்தவகையில் ரம்யா பாண்டியனும் அம்மன் வேடத்தில் போட்டோ ஷூட் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் திடீரென ரம்யா பாண்டியன் கருப்பு சேலையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கான லைக் பெற்றுத் தந்தார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் புதிதாக அம்மன் வேடத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு பக்கம் இவருக்கு கண்டனங்கள் தெரிவித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ரசிகர்கள் லைக் போட்டு வாழ்த்தி வருகிறார்கள்.