2006ம் ஆண்டு வெளியாகிய ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன், இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பல விருதையும் தட்டிச் சென்றார், மேலும் ஜோக்கர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலம் அடைந்தார்.
ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் பிரபலமானரோ இல்லையோ இவர் வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர், அதாவது தன்னுடைய இடுப்பு தெரியும்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதை தனது சமூக வலைத்தளத்தின் மூலம் வெளியிட்டார், அன்றிலிருந்து இன்றுவரை ஒட்டுமொத்த ரசிகர்களும் ரம்யா பக்கத்தில்தான்.
மேலும் ரம்யா பாண்டியன் ஆரம்ப காலத்தில் குறும் படங்களில் நடிக்கத் தொடங்கினார் அதனைத் தொடர்ந்து சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார், அதன்பின்பு 2015ஆம் ஆண்டு வெளியாகிய டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் நடித்தார் மேலும் சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண்தேவதை திரைப் படத்திலும் நடித்திருந்தார்.

எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகை படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் சமீபகாலமாக ஓவர் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில் பளிச்சென்ற முகபாவனையுடன் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
படத்தை பார்த்த ரசிகர்கள் லாக்டவுன்ல மீசை எல்லாம் மொலச்சிடுச்சு என கலாய்த்து வருகிறார்கள்.
