ஒரு பைசா செலவு இல்லாமல் தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் நின்று போட்டோ ஷூட் நடத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மொட்டை வெயிலில் நிற்க வைத்தவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் இவர் வெளியிட்ட புகைப்படத்தின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை இவர் கவர்ந்தது மட்டுமில்லாமல் பல்வேறு இயக்குனர்களையும் இந்த புகைப்படம் கவர்ந்து விட்டது என்றே கூறலாம். அந்த வகையில் இவருக்கு இந்த போட்டோ ஷூட் நடத்திய பிறகு பட வாய்ப்பு களை கைக்கிட்டியது.
அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர் மத்தியில் பிரபலம் ஆனார். இதனைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு பல்வேறு எதிர்ப்புகளும் அவ மரியாதைகளும் மட்டுமே உருவாகின இதனால் ரம்யா பாண்டியன் மீது பல்வேறு நெகடிவ் விமர்சனங்கள் எழுந்தது மட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு அவருக்கு படவாய்ப்புகளும் வர தொடங்கிவிட்டது.
அந்த வகையில் சமீபத்தில் அவர் சூர்யா தயாரிப்பில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ஓரளவிற்கு வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் கெத்து காட்டி வந்தன.
இதனை தொடர்ந்து தற்போது ரம்யா பாண்டியன் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகும் புதிய திரைபடம் ஒன்றில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரபூர்வமான அறிவிப்பை நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் முன்னணி நடிகையாக வலம் வந்தால் கூட பெரிய விஷயம் கிடையாது.