நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளம் உள்ள படங்களான ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்து அறிமுகமானவர். இருந்தாலும் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடையவில்லை அதனால் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க போட்டோ ஷுட்டை கையிலெடுத்தார்.
அப்படி மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது அந்த போட்டோ ஷூட் மூலம் பல ரசிகர்கள் ரம்யா பாண்டியனை பின் தொடர ஆரம்பித்தனர். பின்பு இவருக்கு சின்னத்திரை டிவி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தது.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி மிகவும் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யா தயாரிப்பில் வெளிவந்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
சமீபத்தில் ரம்யா பாண்டியன் ரசிகர்களிடம் லைவில் உரையாடியபோது ரசிகர் ஒருவர் உங்களுடைய தீவிர ரசிகர் நான் என்னை கல்யாணம் செய்து கொள்கிறீர்களா என கேட்டுள்ளார் அதற்கு ரம்யா பாண்டியன் எனக்கான கணவரை நான் கண்டு பிடிக்கும் போது அவருக்கும் என்னைப் பிடித்து இருக்க வேண்டும் அதனால் இப்போது உனக்கு வாய்ப்பில்லை ராஜா என பதிலளித்துள்ளார். மேலும் சிலர் இப்போதே உங்களுக்கு முப்பத்தி ஒரு வயது ஆகிறதே இன்னும் திருமணத்திற்கு எத்தனை ஆண்டுகள்தான் கடத்துவீர்களோ எனவும் கேட்டுள்ளனர்.