Ramya Krishnan : 80, 90 காலகட்டங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் ஹீரோயின்னாகவும், குணத்திர கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் ரம்யா கிருஷ்ணன். தற்பொழுது இவருக்கு 53 வயதாகுவதால் சினிமாவில் ஹீரோயின் ரோல் இல்லை என்றாலும்..
கிடைக்கின்ற வாய்ப்பை தவறவிடாமல் அவ்வப்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.. கடைசியாக கூட இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளிவந்தது இதில் ரஜினிக்கு மனைவியாக நடித்து அசத்தி இருந்தார் இந்த படத்தின் வெற்றிக்கு ரம்யா கிருஷ்ணன் நடிப்பும் ஒரு பக்கபலமாக இருந்தது..
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஏதாவது ஒரு டாப் நடிகரின் படங்களில் கமிட் ஆகுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சீரியலில் தான் கமிட் ஆகியிருக்கிறார்.. ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் சீரியலுக்கு பெயர் போன பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் கலசம், தங்கம், வம்சம், ராஜகுமாரி போன்ற சீரியல்களில் மெயின் ரோலில் நடித்துவர்..
இதுபோக தெலுங்கிலும் நாக பைரவா என்ற தொடரிலும் கடைசியாக நடித்திருந்தார்.. மேலும் சின்னதிரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜ் ஆக இருந்தும் வந்துள்ளார் அதன்படி சென்ற ஆண்டு கூட பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை சூப்பராக நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் “நள தமயந்தி” என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.. இந்த சீரியல் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதியிலிருந்து துவங்கப்பட இருக்கிறது அதற்கான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகின்றன..