காவாலா பாடலுக்கு 52 வயதிலும் தமன்னாவை மிஞ்சும் அளவிற்கு நடனமாடிய ரம்யா கிருஷ்ணன்.! வைரல் வீடியோ..

ramya krishanan
ramya krishanan

Actress Ramya Krishnan: நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஏராளமான பிரபலங்கள் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் மூன்று பாடல்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது அப்படி முதல் பாடல் தான் காவாலா. மரண மாஸ்சாக உருவாக்கி இருக்கும் காவாலா பாடலுக்கு தமன்னா கவர்ச்சியில் குத்தாட்டம் போட ரஜினியின் ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்தது.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், சுனில், தமன்னா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடித்துள்ளனர். இவ்வாறு பிரம்மாண்டமாக ஜெய்லர் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இவ்வாறு மூன்று பாடல்களும் வெளியாகிய சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

முக்கியமாக தமன்னாவின் காவாலா பாடல் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை எனவே ஜெயிலர் படம் ரஜினிக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.