Ramya Krishnan : நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த வந்தவர் இவர் வெறும் 14 வயதில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 14 வயதிலேயே நடிக்க ஆரம்பித்த ரம்யா கிருஷ்ணனுக்கு முதல் திரைப்படம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை.
ஆனால் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பார்த்து இந்த பெண் யார் என பலரும் கேட்க ஆரம்பித்தார்கள் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டிருந்தது. ஆனால் ரம்யா கிருஷ்ணனை பிரபலமாக்கியது முதல் வசந்தம் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆழம் அது ஆழம் இல்லை என்ற பாடல் ரம்யா கிருஷ்ணனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.
அதன் பிறகு பல திரைப்படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார் ஆனால் எந்த ஒரு திரைப்படமும் பெரிதாக சோபிக்கவில்லை இதனால் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. பிறகு கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்தில் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு நடனம் ஆடினார் முதலில் இந்த பாடலுக்கு நடனம் ஆட முடியாது என மறுத்தார்.
அதன் பிறகு ரம்யா கிருஷ்ணனை சமாதானப்படுத்தி படத்தில் நடனம் ஆட வைக்க வைத்தார்கள். அதுமட்டுமில்லாமல் படத்தின் முழு கதையையும் சொல்லிய பிறகுதான் இந்த பாடலுக்கு நடனமாட சம்மதித்தார் ரம்யா கிருஷ்ணன். இந்த ஐட்டம் பாடல் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு மறு வாழ்வு கொடுத்தது என்று கூறலாம் இதனை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்றார் அங்கு கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய என்ற திரைப்படத்தில் நடித்தார். ஒரு காலகட்டத்தில் கிருஷ்ணா வம்யியின் மீது காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்க ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் எப்படி வந்தார் என்பதையும் கூறினார்.
ரஜினி நடிப்பில் வெளியாகிய படையப்பா திரைப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார் இந்த கதையை ரஜினிகாந்திடம் கேஎஸ் ரவிக்குமார் சொன்ன பொழுது நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் என ரஜினி தான் கூறியுள்ளார். அதன் பிறகு தான் ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதனை தொடர்ந்து ராஜமாதாவாக நடித்து உலகம் முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்தார் ரம்யா கிருஷ்ணன்.