Actress trisha got idea for 96 movie next part : திரைப்படம் பிரேம்குமார் அவர்களால் இயக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்தனர். இந்த படத்தில் வர்ஷா பொல்லாமா, ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி கிஷான், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், சதீஷ் போன்றோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் காதல் கதையை கொண்டது.
இத்திரைப்படத்தில் பள்ளி பருவத்திலிருந்து காதலித்த திரிஷாவும் விஜய் சேதுபதியும் இறுதிவரை ஒன்று சேரமாட்டார்கள். த்ரிஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிடும். எனவே இவர்கள் பிரிந்து நண்பர்களாக இருப்பார்கள்.
தற்போது டிக்டாக்கில் இணைந்துள்ள திரிஷா அடிக்கடி ஆங்கில பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.
தற்போது திரிஷாவிற்கு 96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளதாம். அதில் தனது கணவர் கொரோனாவால் இறந்துவிட்டதாகவும் அதனால் இவர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைவது போன்றும் கதையை கூறியுள்ளார். இந்த கதையை அவர் டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். எனவே இதனையறிந்த ரசிகர்கள் விஜய்சேதுபதிக்கு கொரோனா வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கிண்டலடித்துள்ளார்களாம்.