அண்மைக்காலமாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது இதைத் தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வருகிறார்.
AK 61 படத்தில் அஜித் உடன் இணைந்தய் மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, இளம் நடிகர் வீரா என மிகப்பெரிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாகவும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 55 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்து உள்ளதாகவும் அஜித் இரவு / பகல் பார்க்காமல் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகுவதால் அஜித் அதிரடியாக 20 லிருந்து 25 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவல் இருந்து வருகிறது .
படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதால் அஜித் தீவிரமாக நடித்து வருகிறாராம் இதுவரை 80% படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் வெகு விரைவிலேயே மீதி படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும் என கூறப்படுகிறது இந்த நிலையில் தான் படக்குழுவை ஆட்டம் காண வைத்துள்ளது. ராமோஜி பிலிம் சிட்டியில் திடீரென பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
இங்கு கேமராவை வைக்க கூடாது, படம் எடுக்க கூடாது என பல கட்டுப்பாடுகளை அடுத்தடுத்து வைத்துக் கொண்டிருப்பதால் AK 61 படத்தின் சூட்டிங் நடப்பதில் தாமதம் ஆகிறதாம் ஒரு கட்டத்தில் படக்குழு கடுப்பாகி வெளியே வந்து வேறு ஒரு இடத்தில் பேங்க் போன்று செட் அமைக்கப்பட்டு காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம். AK 61 படத்திற்காக படக்குழுவும், அஜித்தும் ரொம்ப மெனக்கெட்டு நடித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன