“புஷ்பா” படத்தின் டிரைலரை பார்த்து விட்டு ராம்கோபால் வர்மா போட்டு ட்வீட்டால் கடுப்பான சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.

puspa

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வந்த வைகுண்டபுரமுலு படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தற்போது புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது முதல் பாகம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே திரையரங்கில் வெளிவர காத்திருக்கிறது. தெலுங்கை தாண்டி பல்வேறு மொழிகளில் வெளியாகும் ரெடியாக இருக்கிறது. இந்தப் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் மற்றும் சாமி சாமி ஆகிய பாடல்கள் வெளிவந்ததை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு வேற ஒரு லெவலில் இந்த படத்தின் டிரெய்லர் இருந்தது மேலும் புஷ்பா கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் வேற லெவலில் நடித்திருந்தார் இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது அந்த வகையில் புஷ்பா படத்தின் டிரைலரை ராம்கோபால் வர்மா பார்த்துவிட்டு அல்லு அர்ஜுன் தான் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என ராம்கோபால் வர்மா ட்வீட் போட்டார்.

அல்லி அர்ஜுன் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் மற்ற தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, மகேஷ்பாபு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் போன்றவர்களும் அவரது ரசிகர்களையும் சற்று வருத்தமடைய செய்துள்ளது. மேலும் ராம்கோபால் வர்மாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

rajini
rajini

அந்த வகையில் ரஜினி ரசிகர் ஒருவர் அறை பத்தியம் தான் உனக்கு இருக்கு 1978 இல் வந்த ரஜினியின் முள்ளும் மலரும் அதற்கு அடுத்து வெளியான ஆறிலிருந்து அறுபது வரை படங்களை போய் பாருங்க ரிலிஸ்டிக் என்னன்னு புரியும் என ராம்கோபால் வர்மாவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். அல்லு அர்ஜுன் நடிப்பில் நல்லா இருந்தா புஷ்பா படத்தை பாராட்டிய அதை விட்டு மற்ற நடிகர்களை ஏன் சீண்டிப் பார்க்கிறார்கள் என கூறியும் அவரை கழுவி ஊற்றிய வருகின்றனர்.