ராமர் நீங்கள் நினைப்பது போல காமெடி நடிகர் மட்டும் கிடையாது – அரசு அதிகாரி.! வெளிவந்த புகைப்படம்.

RAMAR
RAMAR

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சேனல்கள் அனைத்தும் பொழுதுபோக்கிற்காக பல ரியாலிட்டி ஷோக்களை வழங்கி வருகின்றனர். காமெடிக்கு என்று அதிக முக்கியத்துவம் கொடுத்து காமெடி நிகழ்ச்சிகளையே அதிகம் ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி விஜய் டிவி.

இந்த விஜய் டிவி மற்ற தொலைக் காட்சிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை என்டர்டெயின்மென்ட் செய்து வருகின்றனர் அந்த வகையில் சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளை கொடுத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

மேலும் மற்ற தொலைக்காட்சிகள் சீரியலை வைத்தே டிஆர்பி யை பெருமானால் விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளை வைத்தே டிஆர்பி யில் டாப் லிஸ்டில் இருக்கும். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பலரும் மக்கள் மற்றும் சினிமா  பிரபலங்கள் மத்தியில் ரீச் அடைந்து மென்மேலும் வளர்ந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் ராமர்.

இவர் காமெடிக்கு என்று தனிப் பெயர் போனவர் மேலும் சில திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எம் பி எஸ் வெங்கடேசன் அவர்கள் ராமர் குறித்து சில பதிவுகளை வெளியிட்டுள்ளார் அவர் கூறியது ராமர் சின்னத்திரை நடிகர் மட்டுமல்ல அரசு ஊதியம் பெறும் அரசு அதிகாரி என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டது  இன்று கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின்போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் ராமரை சந்தித்தேன், அவரை சந்தித்தது  மகிழ்ச்சி எனவும்  தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ராமர் அரசு ஊதியம் பெறும்  அதிகாரியா என வியந்து கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.