தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து வருவர் நடிகர் ராம்சரண். இப்போ தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று இருக்கும் இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்தப் படத்தின் சூட்டிங் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் ராம்சரண் நடித்த உள்ள RRR திரைப்படமும் வெளிவர ரெடியாக இருக்கிறது ஆம் தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமும் மிகப்பெரிய ஒரு ஹிட்டடிக்கும் என்பது மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.
திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கருடன் இப்போது இணைந்து பணியாற்றி வருவதால் இந்த படத்தை எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கிறது. இந்தப் படத்தில் ராம் சரணுடன் கைகோர்த்து கியாரா அத்வானி மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் பட்ஜெட்டும் மிகப்பெரிய ஒரு தொகையில் படம் எடுக்கப்பட்டு வருகிறது இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு பாடலுக்கு மட்டுமே பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன இந்த நிலையில் இந்த படத்திற்காக நடிகர் ராம்சரண் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அதன்படி பார்க்கையில் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ராம்சரண் சங்கர் இணைந்துள்ள இந்தப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது இந்த படத்தை ராம்சரண் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.