பிரமாண்ட இயக்குனர்களை குறிவைக்கும் ராம்சரண்.! ஷங்கர், ராஜமௌலியை தொடர்ந்து அடுத்த பிரமாண்ட இயக்குனர் உடன் கைகோர்க்க உள்ளாராம்.? வெளியான புகைப்படம்.

shankar-and-rajamouli
shankar-and-rajamouli

உலகம் காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு ஓடுகிறது. அதற்கு ஏற்றவாறு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தன்னை மாற்றிக்கொண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் சிறப்பான படங்களை கொடுக்கின்றனர். மேலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய தொழில் நுட்பத்தை அணுகுவதால் ரசிகர்கள் நல்ல தெளிவுடனும் வித்தியாசமாகவும் இருப்பதால் ரசிகர்கள் ரசித்து பார்க்கின்றனர்.

அந்த வகையில் பிரமாண்ட பொருட்செலவில் சிறப்பான படங்களை எடுத்து  வருபவர்கள் வெகு சிலரே அந்த லிஸ்டில் இணைந்துள்ள அவர் தான் இயக்குனர் ராஜமௌலி இவர் தற்பொழுது ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடிக்கும்  RRR என்ற படத்தை எடுத்துள்ளார்.

அதிலும் முக்கியமாக ராம்சரண் நடித்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு சூப்பர்ஹிட் படமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராம்சரண் அடுத்தடுத்த பிரமாண்ட இயக்குனருடன் கைக்கோர்க்க உள்ளார் அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் ஷங்கருடன் முதல்முறையாக இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கிறது. அதை முடித்த கையோடு அடுத்ததாக கேஜிஎப் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் என்பவருடன் தெலுங்கு டாப் ஹீரோ ராம்சரணுடன் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசாந்த் நீல், ராம்சரண் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் இணைந்து கதை விவாதத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

prashanth neel and ramcharan
prashanth neel and ramcharan 6654