Game Changer: ராம்சரண் ஹீரோவாக நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடல் 15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வைரலாகி வருகிறது. மிகப் பெரிய பட்ஜெட் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அப்படி கேம் சேஞ்சர் படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சி முழுவதுமாக இணையதளத்தில் லீக்லாகி இருக்கும் நிலையில் இந்த பாடல் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வைரலாக பட குழுவினர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். ராம் சரண் இயக்கத்தில் உருவாக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தினை கோலிவுட் திரைவுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.
மேலும் சங்கர் ஒரே நேரத்தில் கமலின் இந்தியன் 2, ராம் சரணின் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் உருவாக்கி வருகிறார். முதன்முறையாக ராம் சரணுடன் இணைந்து இருக்கும் நிலையில் இதனால் கேம் சேஞ்சர் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க, வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார்.
மேலும் அஞ்சலி உள்ளிட்ட ஏராளமான திரைய பிரபலங்கள் படத்தில் நடித்து வருகின்றனர். கடைசியாக வெளியான ராம் சரணியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அந்த எதிர்பார்ப்புடன் கேம் சேஞ்சர் படமும் உருவாகி வருகிறது. இவ்வாறு தற்பொழுது கேம் சேஞ்சர் படத்தின் ஒரு பாடல் காட்சி முழுவதுமாக இணையதளத்தில் லீக்காகி வைரலாகி உள்ளது.
இந்த படத்துக்கு தமன் இசையமைத்த பாடல் தான் லீக் ஆகியுள்ளது. ராம் சரணம், கியாரா அத்வானியும், ஆயிரம் கணக்கான குரூப் டான்ஸர்களுடன் நடனமாடி இருக்கின்றனர். 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகவும் கலர்ஃபுல்லாக உருவாகியுள்ள இந்த பாடல் தான் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது.
இவ்வாறு எப்படி இந்த சீக்ரெட் வெளியானது என்பது தெரியாததால் ஷங்கர் உள்ளிட்ட பட குழுவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த படத்தில் ஒரிஜினல் வெர்ஷன் இன்னும் ரெடியாகவில்லையாம் விரைவில் இதனை படக் குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.