இயக்குனர் ஷங்கர் சினிமாவில் மிக குறைந்த திரைப்படங்களிலேயே இயக்கியிருந்தாலும் அந்த படங்கள் ஒவ்வொன்றும் சுமார் 100 கோடிக்கு மேல் லாபம் பெற்றுத் தந்ததால் அவர் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் பெரும் பொருளாக மாறியதோடு அனைவரையும் வியக்க வைத்தார்.
இவர் கடைசியாக ரஜினியுடன் இணைந்து 2.0 என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் இந்த திரைப்படம் அதிக அளவில் வசூல் வேட்டை நடத்தியது இதை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை ஏற்கனவே வெற்றி கண்டதால் அதன் இரண்டாம் பாகத்தை கமலை வைத்து எடுக்க முடிவெடுத்தார் எல்லாம் சரியாக இருந்தாலும் சூட்டிங்கில் சில தவறுகள் நடந்ததால் இதன் படத்தின் ஷூட்டிங் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
இந்தப் படம் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு லேட்டாகும் என கருத்தில் கொண்டு ஷங்கர் உடனடியாக ஹிந்தி மற்றும் தெலுங்கு பக்கத்தில் அடி எடுத்து வைத்தார் ஹிந்தியில் அந்நியன் படத்தை ரீமேக் செய்ய ரன்வீர்சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அது ஓகே ஆனதால் அவரை கமிட் செய்ய இருந்தது.
இது ஒரு பக்கமிருக்க தெலுங்கில் ராம்சரண் ஐ வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க முனைப்பு காட்டினார் இப்படி இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 படத்திற்காக மிகப்பெரிய பட்ஜெட்டில் போட்ட தயாரிப்பு நிறுவனம் எங்களது படத்தை எடுக்கும் வரை இயக்குனர் சங்கர் வேறு எந்த படத்தையும் எடுக்கக் கூடாது என கோர்ட்டில் கேஸ் போட்டது.
ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் பிரிவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அது தோல்வியில் சந்தித்தது. அதன் பிறகு மேலும் விடாமல் தயாரிப்பு நிறுவனம் சங்கர் இந்தியன் 2 படத்தை எடுக்காமல் ஹிந்தி பக்கமோ அல்லது தெலுங்கு பக்கமோ சென்று அவர் படத்தை எடுக்க கூடாது என ஒரேடியாக பிடிவாதம் பிடித்தது மேலும் அங்குள்ள வர்த்தக சபைக்கு கடிதம் எழுதியது.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர் ராம்சரண் தற்போது அவரது படத்தில் நடிக்க தயங்குகிறார்கள் இதற்காக ராமச்சரன் ஒரு புதிய நிபந்தனை ஒன்றை சங்கருக்கு கொடுத்துள்ளார் அதாவது எனது படத்தை எடுத்த பிறகே மற்ற படங்களை எடுக்க வேண்டும் என உறுதி அளித்தால் மட்டுமே நான் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என கூறி உள்ளார்.