தொடையழகி ரம்பாவின் அம்மா அப்பா இவுங்கதான்.! வைரலாகும் புகைப்படம்

rambha

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை ரம்பா. இவர் பிரபு, நவரச நாயகன் கார்த்திக்,  விஜய், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும் போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த மாநாட மயிலாட என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக வந்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பிறகு சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்திலும் தலை காட்டாமல் இருந்து வந்த நடிகை ரம்பா சமிபத்தில் நடிகை மீனாவின் கணவர் இறந்த போது அவருடைய இறுதி சடங்கு வந்திருந்தார். மீனாவின் கணவர் இறுதி சடங்கை முடித்துவிட்டு ஒரு சில தினங்களுக்கு பின்னர் சென்னையில் உள்ள ஒரு பீச்சில் தனது குடும்பங்களுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ரம்பாவிடம் நீங்கள் சினிமாவில் நடிப்பதற்கு தான் சென்னை வந்து உள்ளீர்களா என்று கேட்டதற்கு எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என தெரிவித்திருந்தார். அதன் பிறகு ரசிகர்கள் ரம்பா  சினிமாவில் நடித்த நன்றாக இருந்திருக்கும் எனவும் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது தனது பெற்றோர்களுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் ரம்பா தனது அப்பா அம்மாவுடன் நெருக்கமாக இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

ramba
ramba