நடிகை ரம்பா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார் இவரின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. பின்பு சினிமாவில் நடிப்பதற்காக அம்ரிதா என பெயரை மாற்றிக்கொண்டார்.அதன் பிறகு இரண்டாவது முறையாக ரம்பா எனவும் பெயரை மாற்றி பிரபலம் அடைந்தார். மேலும் ரம்பா தமிழ் சினிமாவில் முதன் முதலில் உழவன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
இவரின் பூர்வீகம் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த விஜயவாடா ஆகும். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, தெலுங்கு என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.1996 ஆம் ஆண்டு இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா மிகப்பெரிய வெற்றி பெற்றது அந்த திரைப்படத்தில் இந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரம்பா மேலும் அருணாச்சலம், காதலர் தினம், நினைத்தேன்வந்தாய், காதலா காதலா உனக்காக எல்லாம் உனக்காக, பூமகள் ஊர்வலம், மின்சாரக்கண்ணா என பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். 2010ஆம் ஆண்டு பெண் சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதுதான் அவருக்கு கடைசி திரைப்படம் ஆகும்.
பின்பு மானாட மயிலாட என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். ரம்பாவை மக்கள் தொடை அழகி என்று தான் அழைப்பார்கள். அந்த அளவு அவரின் தொடை மிகவும் பிரபலம். மேலும் ரம்பா தமிழ்நாடு மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.
பட வாய்ப்பு குறைந்ததாள் 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்பு மூன்றாவது குழந்தைக்கு தாயான பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் ரம்பா நடிக்கவில்லை.
இந்த நிலையில் ரம்பா சமூக வலைத்தளத்தில் தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், அதில் ரம்பா பொலிவிழந்து முகத்துடன் கண்களில் கருவளையத்துடன் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.