80 காலகட்டங்களில் பல ஹிட் படங்கள் கொடுத்து அசத்தியவர் நடிகர் ராமராஜன். அப்பொழுது உச்ச நட்ச்சத்திர இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் மேலும் முதல் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையும் ராமராஜனுக்கு உண்டு இவர் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் கிட்டடித்த திரைப்படம் ஏராளம்..
அந்த வகையில் வில்லுப்பாட்டுக்காரன், என்ன பெத்த ராசா, கரகாட்டக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, தங்கமான ராசா, எங்க ஊரு மாப்பிள்ளை என வெற்றி படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருந்த இவர் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்கவே இல்லை ஆனால் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்ததாம்..
ஆனால் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என கூறி அனைத்து படங்களையும் நிராகரித்து வந்தார் நீண்ட இடை வேலைக்கு பிறகு தற்பொழுது சாமானியன் என்னும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த படத்தில் ராதாரவி, mime gopi, எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பு வருகின்றனர் இந்த படத்தை ஆர் ராஜேஷ் இயக்குகிறார்.
இளையராஜா இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிவடைந்துள்ளது சாமானியன் படத்தை தொடர்ந்து ராமராஜன் உத்தமன் என்னும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்தி எடுக்க உள்ளாராம்..
இந்தப் படத்திற்கான ஹீரோயினை தேடும் பணியில் தான் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது அதன்படி தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனாவை ராமராஜனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.