13 முறை நேருக்கு நேர் மோதிய ராமராஜன் VS விஜயகாந்த்..! யார் கிங் தெரியுமா.?

vijayakanth
vijayakanth

சினிமா உலகில் போட்டிகள் என்பது அதிகம் இருக்கும் அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க அஜித் விஜய் எப்படி போட்டி போடுகிறார்களோ அதே போல ஆரம்ப காலகட்டத்திலும் எம்ஜிஆர் சிவாஜியை தொடர்ந்து ரஜினி கமல் ஒரு பக்கம் போட்டி போட மறுப்பக்கம் விஜயகாந்த் ராமராஜனும்  போட்டி போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலகட்டத்தில் ராமராஜன் மற்றும் விஜயகாந்தின் படங்கள் பெரிதும் கிராம பக்கத்தில் பெரும் வெற்றியை பெற்றன.

கிராம பக்கத்தில் யாருக்கு மாஸ் அதிகம் என்பதை தெரிந்து கொள்ள இருவருமே நேருக்கு நேர் மோதி உள்ளனர் அந்த வகையில் விஜயகாந்த், ராமராஜனும் 13 முறை நேருக்கு நேர் படங்களின் மூலம் மோதி உள்ளனர் இதில் பெரும்பாலான வெற்றியை விஜயகாந்த் தட்டி தூக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1.  1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் தழுவாத கைகள், தர்மதேவதை ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்தன ராமராஜன் நடிப்பில் நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படம் வெளியானது இந்த மூன்று படங்களுமே வெற்றி.

2. 1987 ஆம் ஆண்டு  விஜயகாந்த் நடித்த வீரபாண்டியன், ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின இதில் எங்க ஊரு பாட்டுக்காரன் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறியது. 3. 1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான காலையும் நீயே மாலையும் நீயே ராமராஜன் நடிப்பில் வெளியான செண்பகமே செண்பகமே இந்த இரண்டு படங்களுமே வெற்றி படங்களாக மாறியது

4. 1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பூந்தோட்ட காவல்காரன் ராமராஜன் நடிப்பில் வெளியான பார்த்தால் பசு ஆகிய படங்களில் வெளியாகின. இதில் பூந்தோட்ட காவல்காரன் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.

5. 1988 ஆம் விஜயகாந்த் நடிப்பில் உழைத்து வாழ வேண்டும், ராமராஜன் நடிப்பில் நம்ம ஊரு நாயகன் படம் வெளியானது இந்த இரண்டு படங்களுமே சுமாராக ஓடியது. 6. 1989 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான ராஜா ராஜா தான், விஜயகாந்த் நடிப்பில்  பொன்மனச்செல்வன்  ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின இதில் பொன்மனச்செல்வன்  பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

7. 1989 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு  விஜயகாந்த் நடித்த ராஜநடை, தர்மம் வெல்லும் போன்ற படங்கள் வெளியாகின ராமராஜன் நடிப்பில் அன்பு கட்டளை, தங்கமான ராசா படம் வெளியானது இதில் விஜயகாந்தின் இரண்டு படமும் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

8. 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விஜயகாந்த் நடிப்பில் மீனாட்சி திருவிளையாடல் ராமராஜன் நடிப்பில் மனசுக்கேத்த மகராசா திரைப்படம் வெளியானது இதில் இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

9.  1990 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான புது பாடகன், ராமராஜன் நடிப்பில் வெளியான தங்கத்தின் தங்கம் ஆகிய படங்கள் வெளியாகி என இதில் புது பாடகன் படம் வெற்றி பெற்றது. 10. 1990 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் ராமராஜன் நடிப்பில் வெளியான புது பாட்டு ஆகிய படங்கள் வெளியாகின இதில் சத்ரியன் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

11. 1991 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு விஜயகாந்த் நடிப்பில் உருவான மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற படமும் ராமராஜன் நடிப்பில்  வெளியான நெஞ்சமுண்டு நேர்மை உண்டு படமும் வெளியானது இதில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படம் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

12. 1997 ஆம் ஆண்டு  ராமராஜன் நடிப்பில் வெளியான கோபுர தீபம், விஜயகாந்த் நடிப்பில் வெளியான தர்மசக்கம் ஆகிய இரண்டு படங்கள் வெளியானது ஆனால் இரண்டு படமே பெரிய வெற்றியை பெறவில்லை. 13. 2001 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான பொன்னான நேரம், விஜயகாந்த் நடிப்பில் வெளியான தவசி படங்கள் வெளியாக்கின இதில் தவசி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.