90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடிக்கட்டி பறந்து வந்த நடிகர் ரஜினி, கமல் ஆகியோரை தனது ஒரே திரைப்படத்தின் மூலம் பின்னுக்கு தள்ளிய பெருமை நடிகர் ராமராஜனையே சேரும்.
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி, கமலின் திரைப்படங்களை விட முதன்முதலில் தனது படத்தை 100 நாட்கள் வரை ஓட வைத்தது நடிகர் ராமராஜன் தான் இவர் அறிமுகமான சில கால கட்டங்களிலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அதிலும் முக்கியமாக கரகாட்டக்காரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று இவரது திரை வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது.
நடிகர் ராமராஜன் நடிகை நளினியை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2000ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர்களின் பெயர் அருண் மற்றும் அருணா ஆகும்.
நடிகர் ராமராஜன் நளினி இருவரும் விவாகரத்து செய்து கொண்டாலும் தனது மகன் திருமணத்தை 2014ஆம் ஆண்டு சென்னையில் இணைந்தே நடத்தினார்கள்.
இவருடைய மகள் அருணா ஒரு பேட்டியில் அம்மா அப்பா இருவரும் விவாகரத்து செய்து கொள்ளும் போது நான் மற்றும் தம்பி ஏழாம் வகுப்பு படித்து வந்தோம். அவர்கள் ஏன் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்பதை எங்களுக்குப் புரிய வைத்தார்கள். இதுவரையிலும் எங்கள் முன்னாடி அம்மா, அப்பா இருவரும் சண்டை போட்டு கொடுத்ததே இல்லை. இருவரும் தங்களைப் பற்றி எங்களிடம் மாற்றி மாற்றி குறை சொல்லி கொண்டதும் இல்லை.
சொல்லப்போனால் இருவரும் அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். அப்பாவை பார்க்க போனால் உடனே அம்மா எப்படி இருக்கிறார்கள் என்றுதான் கேட்பார். இந்த அன்பு வெறியாக மாறி கூடாது என்றுதான் இருவரும் பிரிந்து இருக்கிறாங்க போல என்று கூறியுள்ளார்.