இருபத்தி எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் ராமராஜன் பட நடிகை.! அதுவும் முதன்மை கதாபாத்திரத்தில்

enga-ooru-pattukaran
enga-ooru-pattukaran

ஒரு காலகட்டத்தில் ராமராஜன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் 1987 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியாகிய எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் தான்  பானுப்பிரியாவின் தங்கை நிஷாந்தினி என்ற சாந்திப்பிரியா.

இவர் அந்த திரைப்படத்தில் தனது முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார் கடைசியாக இவர் 1994 ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் நைட்டிங்கேல் எனப் போற்றப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதற்காக இவரை அணுகி உள்ளார்கள் படக்குழு இவரும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

shanthi priya
shanthi priya

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் இந்த நாட்டை தட்டி எழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் வாழ்க்கை வரலாறு கதைப் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர் இருபத்தி எட்டு வருடங்களுக்குப் பிறகு நடிப்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அவர் அறிவித்த அறிவிப்பு.

shanthi priya
shanthi priya