பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராம் – மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

biggboss
biggboss

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே புதிய புதிய  சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்வது வழக்கம் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது பிக்பாஸ் இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 6 -வது சீசனும் அண்மையில் தொடங்கப்பட்டு சூப்பராக  போய்க்கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் ஜிபி முத்து மட்டும் தனது சொந்த காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வாரம் வாரம் எலிமினேஷன் ரவுண்ட் மூலம் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.

அந்த வகையில் இந்த வாரமும் டபுள் எஃபெக்சன் இருக்கிறது. இந்த ஓட்டுகளை வாங்கி இருந்தது ராம் மற்றும் ஆயிஷா தான் அதன்படி நேற்று ரொம்ப குறைந்த வாக்குகளை பெற்றிருந்த ராமை  உலக நாயகன் கமலஹாசன் வெளியேற்றினார். சீசன் ஆரம்பித்ததில் இருந்து ராம் கூட்டத்தோடு கூட்டமாக ஜாலியாக சுற்றி திரிவது சண்டை என்றால் ஒதுங்கிக் கொள்வதுமாக இருந்ததால்..

மக்களுக்கு இவரை ஆரம்பத்திலேயே பிடிக்காமல் போனது மேலும் எதிலும் அதிகம் ஆர்வம் காட்டாமலும் இருந்து வந்தார் ஆனால் வெளியேறும் சமயத்தில் இவர் ஒரு டாஸ்கில் ரகுவரன் கேட்டபில் சூப்பராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ஆனால் அவரது கட்ட நேரம் குறைந்த வாக்குகளைப் பெற்று முதலில் வெளியேறி இருக்கிறார். அடுத்ததாக இன்று ஆயிஷா வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராம் இதுவரை எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு 15,000 முதல் 20 ஆயிரம் வரை பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதன்படி 60 நாட்களில் அவர் பயணித்ததற்காக கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் அதிகமாக  சம்பளம் வங்கி இருப்பார் என சொல்லப்படுகிறது.