சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் தான் சீதா ராமம். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற நிலையில் ரொமான்ஸ் கதையாம்சத்தைக் கொண்டு உருவாகி இருந்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மருணால் தாகூர் ஆகியோர்கள் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இவர்களுடைய இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது இந்த படம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இவர்கள்தான். மேலும் ஏராளமான டுவிட்ஸ்ட்களுடன் அடுத்து நான் என்ன நடக்கப்போகிறது என்பதை மிகவும் ஆர்வமாக பார்க்கும் வகையில் இந்த படம் அமைந்திருந்தது. இவ்வாறு நல்ல கதை அம்சம் உள்ள சீதா ராமம் படத்தை இயக்கியவர் ஹனு ராகவபுடி அடுத்த படத்தை இயக்க தயாராகி வருவதாகவும் சீதா ராமம் படத்தை தயாரித்த அஸ்வினி இந்த படத்தை மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு இரண்டாவது முறையாக ஒன்றிணைந்து உள்ள தயாரிப்பாளர், இயக்குனர்களை தொடர்ந்து இந்த படத்திலும் துல்கர் சல்மான் மற்றும் ஒரு மிருணால் தாகூர் ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ள நிலையில் சீதா ராமம் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு சோசியல் மீடியாவில் இந்த தகவல் வெளியானாலும் இன்னும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களின் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை இன்னும் சில நாட்களில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மான், மருணால் தாகூர் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் கவரப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது முறை இவர்கள் கூட்டணி சேர்ந்தால் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.