Director S. Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருந்து வரும் சங்கர் தற்பொழுது கமலஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தினை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கர் 1993ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் நம்பியார், மனோரமா, அர்ஜூன், மதுபாலா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க குஞ்சுமோன் தயாரித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை கண்டது.
தற்போது ஜென்டில்மேன் படம் வெளியாகி 30 ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில் இதனை சங்கர் மற்றும் அவரது உதவி இயக்குனர் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள். எனவே இதற்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறியவரும் நிலையில் தெலுங்கு நடிகர் ராம்சரண் “இந்திய திரையுலகின் உண்மையான கேம் சேஞ்சர்” எனக் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எனவே இதற்கு நன்றி கூறும் வகையில் சங்கர் “ஆகஸ்டில் அடுத்த நகர்வுக்கு காத்திருக்க முடியவில்லை” என அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது, கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் படங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதமே கிளைமாக்ஸ் காட்சிகள் முடிந்த நிலையில் விரைவில் மீதம் இருக்கும் சண்டை காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு தற்பொழுது கமலை வைத்து இந்தியன் 2 படத்தினை உருவாக்கி வருகிறார். இந்த பட பணிகளில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது அந்த வகையில் இந்தியன் 2 படத்தின் விஎம்எக்ஸ் பணிகளுக்காக அமெரிக்காவில் உள்ளதாக அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.