விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடிக்க போவது இவரா?

virat kohli

Virat kohli: இந்திய பேட்டிங் ஜகான் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருக்கும் நிலையில் அந்த படத்தில் யார் விராட் கோலியாக நடிக்க இருக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் ராம் பொதினேனி.

இந்திய அணியின் முக்கிய கிரிக்கெட் வீரரான விராட் கோலி உடன் நடிக்க ராம் பொதினேனியை ஒப்பிட்டு பார்ப்பதை ரசிகர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான உயரம் மற்றும் முக அம்சங்கள் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

முக்கியமாக ஸ்மார்ட் ஷங்கர் படப்பிடிப்பின் போது தான் ராம் பொதினேனி தோற்றமும் விராட் கோலியின் தோற்றமும் ஒரே மாதிரி இருப்பதாக கூறப்பட்டது அப்படி இவர்கள் ஒரே மாதிரியாக இருக்கும் புகைப்படங்கள் சில அசோசியல் மீடியாவில் வைரலானது.

இந்த சூழலில் ராம் புதினேனி நடித்திருக்கும் ஸ்கந்தா என்ற திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை போயாபதி ஸ்ரீனு இயக்க, ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ராம் பொதினேனி ஈடுபட்ட வந்த நிலையில் இவர் விராட் கோலி உடன் ஒப்பீடு பேசுவது குறித்து பேசி உள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் அதில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அவரது தோற்றத்தை விராட் கோலி உடன் அடிக்கடி ஒப்பிடுவதை பற்றி பேசிய ராம் பொதினேனி விராட் கோலி போல் தன்னை ஒப்பிடுவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

VIRAT KHOLI
virat kohli

விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் அதில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே விராட் கோலியின் கேரக்டரில் ராம்சரண் நடித்திருக்கிறார் என்று சமீப காலங்களாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில் ராம் சரண் தற்பொழுது தனது மற்ற படங்களில் பிசியாக நடித்து வருவதனால் அவரிடம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று ராம்சரண் அலுவலகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.