தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ராகுல் பிரீத் சிங். இவர் தமிழில் முதன்முதலாக தடையற் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதாலாக அறிமுகமானார் முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அடுத்தடுத்து திரைப்படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்ததாக புத்தகம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை அதனால் தமிழில் சரியான மார்க்கெட் அமையாததால் தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இந்த நிலையில் தமிழில் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என மீண்டும் ஸ்பைடர் என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் அடுத்ததாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் கார்த்திக் அவர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
அதுமட்டுமில்லாமல் சூர்யாவுடன் என்ஜிகே திரைப்படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களை தனது பக்கம் திசை திருப்பினார். தற்பொழுது இவர் தமிழில் அயலான் என்ற திரைப்படத்திலும். இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் நான்கு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இப்படி படங்களில் மிகவும் பிசியாக நடித்து வரும் ராகுல் பரீத் சிங் பிரபல பத்திரிகை அட்டைப்படத்திற்கு நீச்சலுடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.