உலகநாயகன் கமலஹாசன் சின்னத்திரையில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஐந்தாவது சீசனும் சில தினங்களுக்கு முன்பு தான் முடிந்தது.
பிக்பாஸ் சீசன் 5 – ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் பெரிய அளவில் சண்டை வந்தது கிடையாது.
திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் தாறுமாறாக சண்டை போட்டுக்கொள்வது வெள்ளி, சனிக் கிழமை ஆனால் போதும் கட்டி பிடித்து உருண்டு நல்ல நண்பர்களாக மாறிவிடுவார்கள் இதனால் இந்த சீசன் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசனாக அமைந்தது.
இதில் இறுதியாக பிரியங்கா மற்றும் ராஜு ஆகிய இருவருமே சிறப்பாக பயணித்தனர் .
இதனால் இறுதியில் யார் கோப்பையை தட்டி பறிப்பார் என்பதே மிகப்பெரிய போட்டியாக இருந்தது ஆனால் ஒரு வழியாக அந்த கோப்பையை ராஜு தட்டி சென்றார். காரணம் பிரியங்காவை விட பொறுமையிலும் சரி, காமெடியிலும் சரி தனது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக செயல்ப்பட்டதால் அவருக்கு அந்த கோப்பையை நியாயமாக சென்றது.
கோப்பையை அவர் பெற்ற இருந்தாலும் இறுதி நாளில் சற்று வருத்தத்துடன் காணப்பட்டார் ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் நல்ல நண்பராகவும் நல்ல காமெடியாக உறுதுணையாக இருந்தவர் இமான் அண்ணாச்சி ஆனால் அவர் 80 நாட்களில் கிட்டத்தட்ட இருக்கும்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இறுதி நாளில் ராஜுவை பார்க்க மற்ற போட்டியாளர்கள் போல இமான் அண்ணாச்சியும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் வரமுடியாமல் போனது அதற்கான காரணமும் சொல்லப்பட்டது கோப்பையை வென்ற பிறகு முதலாவதாக இமான் அண்ணாச்சி வீட்டுக்கு சென்று அவரை பார்த்துள்ளார் அங்கு இமான் அண்ணாச்சியும் ராஜுவை வரவேற்று சிறப்பாக விருந்து கொடுத்தார் கேக்கை வெட்டி அவருக்கு ஊட்டினார்.
மேலும் இருவரும் பல மணி நேரம் உட்கார்ந்து பிக்பாஸ் குறித்தும் பேசினார். கடைசியாக இமான் அண்ணாச்சி வீடியோ மற்றும் சில பதிவுகளையும் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.
#Raju #BiggBossTamilSeason5 pic.twitter.com/jXfM8neq19
— Tamil360Newz (@tamil360newz) January 19, 2022