மீடியா உலகில் தலை காட்டி வரும் பிரபலங்கள் எப்பொழுதும் மக்கள் மனதை வென்று உள்ளனர். அந்த வகையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருப்பவர் ராஜு ஜெயமோகன். வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், பாரதிகண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் பிக்பாஸ் சீசன் 5 – ல் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் இதுவரை 42 நாட்கள்தான் ஓடி உள்ளது அதற்குள் ராஜுவை எப்படியாவது சிக்கவைத்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்பது மாற்ற போட்டியாளர்களின் எண்ணமாக இருக்கிறது ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா, சிபி, பவனி, நிரூப் போன்றவர்களை விட இவரது செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் இவரை இது ஒரு சிக்கலில் சிக்க வைத்து தூக்கி விடவேண்டும் என முயற்சிக்கின்றனர்.
ஆனால் ராஜு ஜெயமோகன் காமெடியாக பேசினாலும் அதேசமயம் அந்த காமெடியில் மற்றவர்களுக்கு தாக்கி தான் பேசுகிறார் அதை உணர்ந்து கொள்ளாமல் இவர்களும் இருந்து வருகின்றனர் ஆனால் அதை மக்கள் புரிந்துகொண்டு உள்ளதால் தற்போது இவர் அதிகப்படியான மக்கள் மற்றும் ரசிகர்களை பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
போதாத குறைக்கு இவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் படத்தை பெறவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவருகிறது. சமீபத்தில்கூட கமலே பிக் பாஸ் வீட்டில் சரியாக பயணிக்கிறார் மற்ற போட்டிகளுக்காக உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள் என மறைமுகமாக சொன்னார் அதை சரியாக இம்மானும், ராஜு வும் சரியாக புரிந்து கொண்டுள்ளனர் நிச்சயம் ராஜு தனது வழக்கமான என்டர்டைன்மென்ட் ஒரு பக்கம் காட்டினாலும் விளையாட்டில் மட்டும் சற்று போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் விளையாடுவார் என தெரியவருகிறது.
இதனால் பிக் பாஸ் வீட்டில் இனிமேல் அனல் பறக்கும் என தெரியவருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் ரியோ உடன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.