விஜய் டிவி தொலைக்காட்சி பிக்பாஸ் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் சீசன் சீனாக தற்போது நடத்தி வருகிறது. நான்கு சீசன்களில் சிறப்பாக முடிந்த நிலையில் பிக்பாஸ் 5 வது சீசன் அண்மையில்தான் தொடங்கியது. இதில் 10 பெண்களும் 7ஆண்களும் ஒரு திருநங்கை என 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அவர்களில் ஒருவர் ராஜூ ஜெயமோகன்.
சின்னத்திரை சீரியல்களில் தனது பயணத்தை ஆரம்பித்து படிப்படியாக தற்பொழுது மக்களின் மனதில் கால் தடம் பதித்து வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார். மேலும் முன்னேறி செல்ல முயற்சித்து வருகிறார். அதுக்கு உறுதுணையாக பிக்பாஸ் இருக்கும் என நம்பித்தான் அவர் இந்த போட்டியில் பங்கு பெற்றுள்ளார் என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் ராஜு ஜெய மோகன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் அறிமுகமாகி தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தற்போது சிறப்பாக நடித்து வருகிறார். இவரைப்போலவே சீரியல்களில் நடிப்பது தற்பொழுது வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தவர் நடிகர் கவின். ஹீரோவாக கவின் நடித்த நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
ராஜு ஜெயமோகன் என்பது குறிப்பிடத்தக்கது மீண்டும் வெள்ளித்திரையில் கால்தடம் உங்களின் ஆதரவை தேடிக்கொண்டிருக்கிறார் மேலும் இவர் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் சிஷ்யனான இவர் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும் அவருடன் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியே பன்முகத் தன்மை கொண்டவராக ராஜூ ஜெயமோகன் இருக்கிறார். பிக்பாஸ் இவருக்கு நல்ல எதிர் காலத்தை கொடுக்கும் என நம்பி இருக்கிறார். இந்த நிலையில் ராஜூ ஜெயமோகன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.