தமிழ் சினிமாவில் உச்சத்தில் நிற்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்பொழுது இவர் பல வெற்றி படங்களை கொடுத்த சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஜினி அவர்கள் கடந்த இரண்டு அல்லது மூன்று படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறாத நிலையில் தற்போது அவர் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து உள்ளது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்களும் இவர்கள் காம்பினேஷன் சிறப்பாக இருக்கும் என கூறிவருகிறார்கள்.
படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது இப்படத்தில் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் மற்றும் கீர்த்திசுரேஷ், குஷ்பூ ,மீனா, சதீஷ்,சூரி போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளராக டி. இமான் அவர்கள் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் வில்லன் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது என்றே கூறலாம்.
தெலுங்கு நடிகரான கோபிசந்த் அவர்கள் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இவர் மட்டுமில்லாமல் முன்னணி நடிகரான பிரகாஷ்ராஜ் அவர்களும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.கோபிசந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.