சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுக்கும் ரஜினி, முட்டி மோதும் விஜய்… இதற்கு என்னதான் தீர்வு.?

rajini and vijay
rajini and vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்துவருகிறது நாம் அனைவரும் அறிந்ததே.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 70% முடிவடைந்த நிலையில் மீதி படம் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக முடிந்தபின் எடுக்கப்படும் என தெரியவருகிறது அதுபோல தளபதி விஜய் அவர்கள் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் திரையரங்கில் வெளியாகும் என தெரியவருகிறது இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார் இப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோரோனாவால் பலர் பாதிக்கப்பட்ட வருவதை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டே நடிக்க முன் வந்துள்ளார்கள் இந்த நிலையில் விஜய் அவர்கள் அடுத்த படத்தில் நடிக்க  உள்ளார் இதனையடுத்து புதிய இப்படத்தில் சம்பளத்தை குறைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சம்பளத்தைக் குறைக்காமல் இருந்து வருகிறார் விஜய்

rajini
rajini

விஜய் குறைக்கிறாரோ இல்லையோ தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்தா படத்திற்காக ரஜினி சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளார் என பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார். இதனை அறிந்துகண்ட ரஜினி ரசிகர்கள் இதனால்தான் தமிழ் சினிமாவில் அவர் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் மேலும் அவர் தமிழ் சினிமாவில் எப்போதும் ரஜினி ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்றும் கூறி வருகின்றனர்.