ராஜ்கிரண் சம்மதம் இல்லாமலேயே பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொண்ட மகள்.! அதிர்ச்சியில் திரை பிரபலங்கள்..

raji-kiran
raji-kiran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜ்கிரனின் மகள் சமீபத்தில் அவருடைய சம்மதம் இல்லாமலேயே திருமணம் நடந்து விட்டதாகவும் மேலும் சன் டிவி பிரபல சீரியல் நடிகரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் வலம் வந்து கொண்டிருக்கும் ராஜ்கிரண் சினிமாவில் முதலில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

பிறகு தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் கதாநாயகராக நடித்து பிரபலமடைந்தார் இப்படிப்பட்ட நிலையில் வயதான காரணத்தினால் தற்பொழுது தொடர்ந்து குணசத்திர வேடங்களில் நடித்த வருகிறார். இந்நிலையில் இவருக்கு மகள், மகன் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அதில் இவருடைய மகள் ஜீனத் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாதஸ்வரம் சீரியலில் நடித்த பிரபலமடைந்த முனீஸ் ராஜை காதலித்ததாகவும் இருவரும் ராஜ்கிரன் குடும்பத்தின் சம்மதம் இல்லாமலேயே திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சின்னத்திரை சீரியலின் மூலம் பிரபலமடைந்த முனீஸ் ராஜ் நாதஸ்வரம் சீரியலினை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களில் ஹீரோவாக நடித்து வந்தார் பிறகு திரைப்படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சண்முகராஜின் சகோதரர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

sun tv0 actor
sun tv0 actor

இப்படிப்பட்ட நிலையில் முனீஸ் ராஜ் ஜீனத் இவர்களுடைய திருமணத்தை முனீஸ் ராஜ் குடும்பத்தினர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் ஆனால் ராஜ்கிரன் குடும்பத்தில் இருப்பவர்கள் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இதன் காரணமாக இவர்களுடைய திருமணத்திற்கு பெரிதாக யாரும் ஒப்புக்கொள்ளாத நிலையில் மிகவும் எளிமையாக கோவிலில் வைத்து நடைபெற்று உள்ளது இதில் சிலர் மட்டுமே கலந்து கொண்டு உள்ளார்கள் தமிழ் சினிமாவில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.