முன்னணி நடிகர்கள் ரஜினி கமலுக்கு முன்பே 1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர்.! யார் தெரியுமா?

rajini-kamal-tamil360newz

rajkiran is get first 1 cr salary in tamil cinema : போட்டி இல்லை என்றால் வாழ்க்கையே வெறுத்து விடும் அப்படிதான் சினிமாவிலும், ஒருவரை ஒருவர் போட்டியாக நினைத்துக் கொண்டால் தான் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும், அந்த வகையில் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி- கமல், அஜித்- விஜய் தனுஷ்-சிம்பு என தொழில்ரீதியாக இவர்கள் போட்டி போட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால் இவர்கள் நட்பு ரீதியாக நண்பர்களாக தான் இருக்கிறார்கள். இந்தநிலையில் 80 மற்றும் 90களில தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் ரஜினி, கமல், இவர்கள் இருவருமே மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்தார்கள், ஆனாலும் ரஜினி இன்று வரை மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.

அதுவும் அந்த காலகட்டத்தில் ரஜினி, கமல் திரைப்படம் என்றாலே ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் அந்த அளவுக்கு மாபெரும் ஹிட் அடிக்கும், அப்படி இருக்கும் நிலையில் அப்பொழுது ரஜினி, கமலை ஆட்டிப் பார்த்த நடிகர்கள் சிலர் இருக்கிறார்கள் சினிமாவில், ரஜினி, கமல் திரைப்படத்தை விட அந்த நடிகர்களின் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அந்த வகையில் விஜயகாந்த் மற்றும் ராமராஜன் திரைப்படத்தை குறிப்பிட்டு சொல்லலாம், விஜயகாந்த் திரைப்படம் ராமராஜன் திரைப்படம் அந்த காலகட்டத்தில் மாபெரும் ஹிட் அடித்துள்ளது, அதேபோல் இவர்களின் திரைப்படம் 200 நாட்களை கடந்து ஓடி உள்ளது. இருந்தாலும் ராமராஜன் விஜயகாந்த் தற்போது சினிமாவில் இல்லை இருவரும் தீவிர அரசியலில் இறங்கி விட்டார்கள்.

ஆனால் ரஜினி மற்றும் கமல் இன்னும் சினிமாவில் முன்னணி நிலையில் இருக்கிறார்கள், ஆனால் இவர்களையே ஒரு காலத்தில் தூக்கி சாப்பிட்ட நடிகர் என்றால் அது ராஜ்கிரண் தான், ரஜினி கமலுக்கு முன்னாடியே முதல் முறையாக தமிழ் சினிமாவில் ஒரு கோடி வரை சம்பளமாக வாங்கிய நடிகர் இவர்தான். 1996 ஆம் ஆண்டு ராஜ்கிரன், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாக்கிய மாணிக்கம் திரைப்படத்திற்காக தான் ராஜ்கிரன் ஒரு கோடி வரை சம்பளமாக வாங்கினாராம்.

rajkiran
rajkiran

இந்த மாணிக்கம் திரைப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது, ராஜ்கிரண் நடித்த முதல் திரைப்படம் என் ராசாவின் மனசிலே அந்த திரைப்படத்தில் ராஜ்கிரன் வேட்டியை துடைத்தெறிய தூக்கி கட்டி தொடையை தட்டி வந்தால் அப்படி ஒரு கம்பீரமாக இருப்பார் அப்பொழுது உள்ள இளசுகள் அந்த காட்சியை பார்த்து முறுக்கு எடுத்து கம்பீரமாக இருப்பார்களாம்.

அப்படியிருந்த ராஜ்கிரன் சமீபத்தில் காசுக்காக மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என கூறியது மக்களிடையே அவரின் நல்ல உள்ளம் தெரியவந்தது.